பெண்களினுடைய கைப்பைகளின் இரகசியத்தை (இது பலருக்கும் தெரிந்ததுதான் ) போட்டு உடைக்கும் விதத்தில் அண்மையில் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. உண்மையிலேயே நாம் இதனைப்பற்றி அறிந்திருந்தாலும் இப்படி பார்க்கும் பொது அதிர்ச்சியாகத்தானிருக்கிறது . அதனை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன் .
அந்த மின்னஞ்சலின் இறுதியில் ஒரு வாசகம் இருந்தது அதை பார்த்ததும் சிரிப்பதா இல்லை இந்த விலங்குகளுக்காக அழுவதா என்று தெரியவில்லை. அந்த வாசகத்தை இங்கே போடுவதால் எனது இருப்புக்கு எந்த வித பிரச்சினையும் இல்லை என்பதால் அதனை இங்கே போடுகிறேன்.
"Stop Killing Animals"
இங்கே மனிதர்களும் விலங்குகள்தான் நாங்கள் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறோம் இவ்வளவு நாளும் என்று விஞ்ஞான ரீதியாக ஏதாவது கருத்துக்களை கூறி எனக்கு எதிராகபொய் பிரசாரங்கள பரப்ப வேண்டாமென்று மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
முன்பொருமுறை வாசித்த ஒரு நகைச்சுவை ஏனோ இப்போது நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
இரண்டு நாய்கள் பேசிக்கொள்கின்றன, ஒரு நாய் இன்னொரு நாயை பார்த்து சொல்கிறது
"கண்ட கண்ட மாதிரி வெளில போகாதே மனுசன சுடுற மாதிரி சுட்டு போடுவாங்கள்"
"கண்ட கண்ட மாதிரி வெளில போகாதே மனுசன சுடுற மாதிரி சுட்டு போடுவாங்கள்"

8 comments:
//
கண்ட கண்ட மாதிரி வெளில போகாதே மனுசன சுடுற மாதிரி சுட்டு போடுவாங்கள்" //
சிந்திதேன் வருந்துகின்றேன்...
"கண்ட கண்ட மாதிரி வெளில போகாதே மனுசன சுடுற மாதிரி சுட்டு போடுவாங்கள்"
-ஈழத்தமிழர்களின் இன்றைய நிஜம்
அன்றே சொன்னான் புத்தன்
ஆசையே துன்பத்திற்குக் காரணமாம்!
பாம்பென்ன? புலியென்ன?
ஈழத் தமிழர் என்றாலும் என்ன?
சாவதெற்கென்றே பிறந்த இனதிற்கு - வாழும் ஆசை எதற்கு?
ஆகவேதான் இவ்வுலகில்...
வலிந்தவன் கொல்வதும் சரி! வலிமையற்றவன்...
கொல்லப்படுவதும் சரி!
புத்தம் சரணம் கச்சாமி!
http://pudugaithendral.blogspot.com/2009/03/blog-post_26.html//
என்னுடைய இந்தப் பதிவில் தங்களின் பதிவின் சுட்டி கொடுத்துள்ளேன்.
//ஆ.ஞானசேகரன் said...
//
கண்ட கண்ட மாதிரி வெளில போகாதே மனுசன சுடுற மாதிரி சுட்டு போடுவாங்கள்" //
சிந்திதேன் வருந்துகின்றேன்...//
இதுதான் இப்போதைய நிஜம் ஞானசேகரன்
வருகைக்கு நன்றி
// வலசு - வேலணை said...
"கண்ட கண்ட மாதிரி வெளில போகாதே மனுசன சுடுற மாதிரி சுட்டு போடுவாங்கள்"
-ஈழத்தமிழர்களின் இன்றைய நிஜம்//
உண்மைதான் வலசு,
வருகைக்கு நன்றி
//
Blogger சுசி... said...
அன்றே சொன்னான் புத்தன்
ஆசையே துன்பத்திற்குக் காரணமாம்!
பாம்பென்ன? புலியென்ன?
ஈழத் தமிழர் என்றாலும் என்ன?
சாவதெற்கென்றே பிறந்த இனதிற்கு - வாழும் ஆசை எதற்கு?
ஆகவேதான் இவ்வுலகில்...
வலிந்தவன் கொல்வதும் சரி! வலிமையற்றவன்...
கொல்லப்படுவதும் சரி!
புத்தம் சரணம் கச்சாமி!//
தர்மம் சரணம் கச்சாமி !
நன்றி சுசி
//புதுகைத் தென்றல் said...
http://pudugaithendral.blogspot.com/2009/03/blog-post_26.html//
என்னுடைய இந்தப் பதிவில் தங்களின் பதிவின் சுட்டி கொடுத்துள்ளேன்.//
பார்த்தேன் புதுகை தென்றல்.
தொடுப்புக்கு நன்றி
Post a Comment