பிரபல கணினி வல்லுனரான Piergiorgio Zambrini என்பவர் ஆப்பிள் இன் ஐ போன் மற்றும் ஐ பொட்டிலே ஒரு விபரீதமான பாதுகாப்பு ஓட்டை இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அவரது கூற்றுப்படி இந்த வழுவானது ஐ போன் மற்றும் ஐ பொட்டினை செயலிழக்க வைக்ககூடியதாம்.
இவரது கண்டுபிடிப்பின்படி இந்த வழு , ஆப்பிள் இன் வீடியோ போர்மட்டின் ஆடியோ பகுதியில் உள்ளது. ஒரு கொந்தர் (hacker) நினைத்தால் ஒரு சிறிய செயல் நிரலை எழுதி ஒரு வீடியோ கோப்பினில் இந்த வழுவுடன்இணைத்துவிட்டால் எப்போது அந்த கோப்பினை திறக்கும் போதும் ஐ போன் செயலிழந்து விடும் என்று எச்சரிக்கிறார் .
இந்த வழுவானது ஆப்பிள் ஒபெறேடிங் சிஸ்டத்தினால் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு shared code library இல் உள்ளது . இந்த வழுவானது கருவிக்கு எந்தவிதமான நிரந்தர சேதத்தையும் தராத போதிலும் கருவியை செயலிழக்க செய்து பின்னர் ரீபூட் பண்ண வைக்கும் .
Forbes.com இற்கு வழங்கியிருக்கும் ஒரு செவ்வியிலே தாம் இத்தனை ஜூலை மாதமளவிலேயே கண்டு பிடித்துவிட்டதாகவும் அப்போது ஆப்பிள் ஐ எச்சரித்தும் அதனிடமிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை என்று கூறியுள்ளார் .
Zambrini ஒரு இத்தாலிய கணினி வல்லுநர் Ziphone என்ற மென்பொருளை உருவாக்கியதற்காக பலராலும் அறியப்பட்டவர் . இம்மென்பொருளானது ஐ போன் ஐ AT&T அல்லாத வேறு வலை அமைப்புக்களிலும் பாவிக்ககூடியவாறு மாட்டும் வல்லமை படைத்தது அதுமட்டுமல்லாது ஆப்பிள் இனால் அங்கீகரிக்கப்படாத மென்பொருட்களை பாவிக்கவும் உதவும் மென்பொருளாகும் .இதற்கு முதலும் பல பாதுகாப்பு ஓட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன . கடந்த மாதம் இஸ்ரேல் ஐ சேர்ந்த Aviv Raff என்பவர் புதிதாக வெளியிடப்பட்ட 3G ஐ போன் இல் இரண்டு துளைகளை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
முதலாவது ஐ போன் மெயில் இல் URL ஐ வெளிப்படுத்துவதிலுள்ள குறை . இதனால் ஒரு கொந்தர் இனால் ஒரு Malicious URL இணை பாதுகாப்பான URL போல அனுப்பமுடியும் .
மற்றையது ஐ போன் இனுடைய மின்னஞ்சல் மென்பொருள், இது எரிதங்களை அனுப்புபவர்களுக்கு எது உண்மையான மின்னஞ்சல் முகவரி என்று கண்டுபிடிக்க கூடியதாக இருக்கிறது .
அண்மையில் ஐரோப்பாவின் குளிரான காலநிலை காரணமாக இ போன் இன் touch screen இன் உணர்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பல தொல்லைகளை அது கொடுப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது .
ஆக ஐ பாட் தந்த வெற்றியை ஐ போன் கொடுக்குமா என்பதுதான் கேள்விக்குறி .






6 comments:
ஆத்திச்சூடியை நினைவு கூரும் தலைப்பிற்காவவே உள்ளே வந்தேன். தகவலுக்கு நன்றிகள்.
வருகைக்கு நன்றி சதங்கா ......என்னையறியாமலே அப்படியொரு தலைப்பு அமைந்து விட்டது
அப்ப வாங்கத் தேவையில்லையா?
வருகைக்கு நன்றி ஆட்காட்டி ,
இவ்வளவும் பார்த்த பிறகும் நான் வாங்கத்தான் போறேன் எண்டு நீங்க அடம்பிடிச்சா நான் ஒன்னும் பண்ண முடியாது :))
இல்லை. எங்கட நிறுவனம் தான் இங்க குடுக்குது. இஞ்சத்தய காசு 50 குடுத்தா வாங்கலாம்.மாசமாசம் பில்லும் குடுத்திருவாங்கள். இப்ப என்ன செய்யலாம்? சொல்லுங்கோ!
ஓஹோ .......அப்படியா அப்படியெண்டால் கூட்டிக்கழிச்சு பாத்தா உங்களுக்குத்தான் லாபம் வரும்போல இருக்குதே ......வாங்கிடுங்க . இப்பிடித்தான் ஆரம்பத்தில கொஞ்சம் ஆட்டம் காணத்தான் செய்யும் அப்புறம் எல்லாம் சரியாயிடும் . நான் என்ன பாவிச்சுப்பார்த்து அனுபவத்திலையா சொல்லுறேன் எல்லாம் மற்றவங்க சொல்லுறதுதானே . அதனுடைய ஸ்டையில் மற்றும் இதர விசயங்களையும் பார்க்கும்போது இதெல்லாம் பெரிசா எடுக்க தேவையில்லை நினைக்கிறேன்.
Post a Comment